2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நால்வர் கைது

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 01 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிஃபாத்)

இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுப்பதாகக் கூறி சுமார் 65 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததான குற்றச்சாட்டின் பேரில் கண்டி பொலிஸாரால் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி விசேட குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

அத்துடன் சந்தேகநபர்களால் வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட கார் ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்டி பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X