2021 ஜூலை 31, சனிக்கிழமை

போலி நகைகளை அடகு வைக்க முயன்ற யுவதி கைது

Super User   / 2011 ஏப்ரல் 01 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

வங்கியொன்றில் போலி நகைகளை அடகு வைக்க முற்பட்ட யுவதியொருவரையும்  இம்மோசடியுடன் தொடர்புடைய நபரொருவரையும் ஹெம்மாதகமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த யுவதி ஹெம்மாதகமை பிரதேசத்திலுள்ள வங்கியொன்றில் நேற்று வியாழக்கிழமை இரு வளையல்களை அடகு வைக்க வந்துள்ளார்.

வங்கி உத்தியோகஸ்தர் நகையை பரிசோதித்தபோது அவை தங்க முலாம் பூசப்பட்ட போலி வளையல்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸாhருக்கு வழங்கிய புகாரை தொடர்ந்து குறித்த யுவதியையும் மற்றுமொரு சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் இவர்கள் வழங்கிய தகவலின் பேரில் கெகிராவ பகுதியில் போலி நகைகளை தயாரிக்கும் இடமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் நகைகள் தயாரிக்கும் இயந்திரமொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்விரு சந்தேக நபர்களும் மாவனல்லை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.     
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .