2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு கல்வி பெரும் பங்காற்றுகிறது: பிரதமர்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

நாட்டின் தேவைக்கேற்ப  கல்வித்துறையில் மாற்றங்கள்  உள்வாங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார்.

மத்திய மாகாண  கல்வித்துறை சார் ஆளணியினருடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மனிதனை மனிதனாக வாழ வைப்பதில் கல்வி பெரும் பங்காற்றுகின்றது. எனவே, தரமான கல்வியை வழங்கி சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப சகலரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமெனவும் அவர் கூறினார்.

மாணவர்கள் மத்தியில் கல்வியுடன் நல்லொழுக்கமும் ஊட்டப்பட வேண்டுமெனவும் பிரதமர் குறிப்பிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .