Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜயசுந்தர கிராமப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகள் சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 5 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றைத் தொடர்ந்து சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச்சென்ற பொலிஸார் கொலை செய்யப்பட்டவரின் சடலத்தினை மீட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையின் சாவச்சாலைக்குக் கொண்டு சென்றனர்.
இந்தக்கொலைச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இந்தச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago