2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

2018 ஆம் ஆண்டின் பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு இப்போதிருந்தே தயாராக வேண்டும் : பிரதமர்

Super User   / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இலங்கை வரலாற்றிலே பல தசாப்தங்களுக்கு பிறகு வடக்கு கிழக்கு மாகாணங்கள் உற்பட முழு நாட்டினதும் விளையாட்டு வீரர்ககளை  ஓரிடத்தில் சேர்த்து ஒற்றுமையுடன் நாட்டின் தேசிய விளையாட்டு விழாவை நடத்த கிடைத்தமை இந்த நாட்டுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும் என பிரதமர் டீ.எம். ஜயரத்ன தெரிவித்தார்.

இன்று மாலை கண்டி போகம்பறை மைதானத்தில் 36 ஆவது தேசிய விளையாட்டு விழாவை ஆரம்பித்த வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'விளையாட்டு ஒரு பூரண மணிதனை உருவாக்க வழிவகுக்கும். விளையாட்டில் ஈடுபடுபவருக்கு கோபம் வருவது கட்டுப்படுத்தப்படுகிறது. மற்றவர்களுடன் சுமூகமாக பழகுவார். இவ்வாறானவர்களினால் சமூகத்துக்கு நன்மையே தவிர தீமை ஏற்படாது.

இருந்த போதும் தற்போது நடைபெறுகின்ற சில நிகழ்வுகளை பார்க்கும்போது விளையாட்டுத்தறையிலும் பணத்துக்காகவும் வேறு விடயங்களுக்காகவும் சில தவறுகள் நடைபெறுகின்றன. இந்த நிலைமை மாற வேண்டும்.

2018 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவை இலங்கையில் நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அதற்காக நாங்கள் இப்போதிருந்தே தயாராக வேண்டுமென்றும்' என்றார்.

இங்கு உரை நிகழ்த்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சீ.பீ ரத்னாயக்கா , 'எதிர்வரும் காலத்தில் விளையாட்டு துறையை முன்னேற்றுவதற்கு எமது அரசாங்கம் பல திட்டங்களை அமுல் படுத்துகின்றது.  2018 ஆ ம் ஆண்டு இலங்கையில் நடை பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவில் பதக்கங்களை பெற்றுக் கொள்ளும்  வீரர்கள்  இங்கிருந்தே உருவாக்கப்படுவார்கள்' என்று கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .