2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டன் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 320 பேர் பயிற்சி பெற்று வெளியேறினர்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு பயிற்சிகளைப் பெற்ற 320 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வு அண்மையில் ஹட்டனில் இடம்பெற்றது.

இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் தி.மு.ஜயரட்ண மாணவர்கள் சிலருக்குச் சான்றிதழ்களை வழங்கி  பதக்கங்களை அணிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சர் அனுஷியா சிவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியைப் பூர்த்தி செய்கின்ற மாணவர்களுக்குச் சர்வதேச தரத்திலான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .