2021 ஜூன் 24, வியாழக்கிழமை

494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

சிவாணி ஸ்ரீ   / 2020 ஜனவரி 05 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தில், 494 பட்டதாரிகளுக்கு, நேற்று (04), ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. 

மேற்படி நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில், மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  

22.06.2018 அன்று, சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள பட்டதாரிகளை, ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 

இதற்கமைய, கடந்த வருடம் மார்ச் 31ஆம் திகதி அதற்கான போட்டிப் பரீட்சைகளும் நடைபெற்றன. இதில் தெரிவு செய்யப்பட்ட 494 பட்டதாரிகளுக்கே, தற்போது, ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .