Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நதீர் சரீப்தீன்)
பலாங்கொடை நிவித்திகலை சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த 6 மாதகாலப் பகுதியில் 250 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 4 பேர் டெங்கு நோயால் மரணமடைந்துள்ளதாகவும் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்காத 10 பேருக்கு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நிவித்திகலைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உதயாங்க ஜெகத் தெரிவித்தார்.
நிவித்திகலைப் பிரதேசத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சகலவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், பொதுஸ்தாபனங்கள் மற்றும் வீடுகள் தோறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு நிவித்திகலை பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் முழுமையான ஆதரவு கிடைத்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
12 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago