Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 30 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச அபிவிருத்தி குறைப்பாடுகளில் அதிக கவனம் செலுத்தி குறைப்பாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். என அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் இராமன் கோபாலகிருஸ்ணன் நுவரெலியா மாவட்ட பிரதேச அபிவிருத்தி குழுவின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நுவரெலியா பிரதேச செயலகத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஜீவன் தொண்டமானின் தலைமையில் நேற்று முன்தினம் (28) நடைபெற்றது.
இதன்போதே தவிசாளர் இராமன் கோபாலகிருஸ்ணன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
அக்கரப்பத்தனை பிரதேசத்தில் நிலவுகின்ற பின் தங்கியுள்ள அபிவிருத்திகளினால் பிரதேச மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மூன்று வைத்தியசாலைகளை உள்ளடக்கிய அக்கரப்பத்தனை பிரதேசத்தில் திடீர் மரண பரிசோதகர் ஒருவர் இல்லை. அதேபோல திருமண பதிவாளரும் இல்லை.இதனால் பிரதேச மக்கள் இறப்பு, பிறப்பு, திருமண ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கலை எதிர் கொண்டுள்ளனர் என சுட்டிக்காட்டினார்.
மேலும் டயகம-போடைஸ் பிரதான பாதை மற்றும் டயகம-லிந்துலை பிரதான பாதை தொடர்பில் தெரிவித்த அவர், பயணத்தை மேற்கொள்ள முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக மாறிவிட்டதாகவும் இவ்வீதகளின் குறைப்பாடுகளை சீர் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும் திஸ்பனை,மன்றாசி ஆகிய இடங்களில் விளையாட்டு மைதானங்களில் உள்ள கற்களை அகற்றி இம் மைதானங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இதன் போது கோரிக்கையை முன்வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
7 hours ago
7 hours ago