Editorial / 2022 ஜனவரி 02 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்
அக்கரப்பத்தனை நகரத்தில் சித்திவிநாயகர் ஆலயத்தில் சிற்பங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்து ஆலயமொன்று நகரில் இல்லாத காரணத்தினால் நகர மக்கள் இணைந்து சித்திவிநாயகர் ஆலயமொன்றை புதிதாக நிர்மாணித்தனர். அந்த ஆலயத்துக்கான கும்பாபிஷேகம், எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருந்தது.
இந்நிலையில், புதிதாக செதுக்கப்பட்ட 14 சிற்பங்களை, இனந்தெரியாத கும்பலொன்று நேற்றிரவு உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட அக்கரப்பத்தனை பொலிஸார் ஆலய நிர்மாணப் பணியில் ஈடுபட்டுவந்தவர்களில் நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .