Editorial / 2018 மே 06 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அக்குறணையில் அமைந்துள்ள, சுமார் 35 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கட்டடத்தை உடைத்து விட்டு, புதிய நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடத்தை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நிலக்கீழ் வாகனத் தரிப்பிடத்துடன் கூடிய நான்கு மாடிகளைக் கொண்ட தள மற்றும் முதலாம் மாடிகளில், தலா 18 வீதம் 36 கடைகளும் ஒரு தகவல் பிரிவும், அனைத்து வங்கிகளுக்குமான தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரங்களும் அமைக்கப்படவுள்ளன என, மேற்படி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், மூன்றாம் மாடியில் அக்குறணை பிரதேச சபைக்கான உப அலுவலகம் மற்றும் காரியாலயங்களும், நான்காம் மாடியில் ஒரு சிறிய கேட்போர் கூடம் மற்றும் உடற்பயிற்சி நிலையம் அடங்களாக அனைத்து மாடிகளிலும் கழிவறை வசதிகளும் புதிய சந்தை கட்டடத் தொகுதியில் அமைக்கப்படவுள்ளன.
34 minute ago
36 minute ago
44 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
36 minute ago
44 minute ago
53 minute ago