2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

அக்குறணை மிதந்ததால் பல கோடி ரூபாய் நட்டம்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 27 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கடந்த வாரம் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் அக்குறணை நகரில் ஏற்பட்ட வௌ்ளத்தால் 300 கோடி ரூபாய்க்கு அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஒருவர் தெரிவித்தார்.

அக்குறணை நகரை ஊடறுத்துச் செல்லும் பிஹாஓயகொட பெருக்கெடுத்ததால் அக்குறணை நகர் முழுவதும் வௌ்ளத்தில் மூழ்கியது.

இதனால் அம்பதென்னயிலிருந்து அக்குறணை 7ஆம் மைல்கல் வரையான வர்த்தக நிலையங்களும் 340 வீடுகளும் சேதமடைந்துள்ளதென அக்குறணை பிரதேச செயலாளர் இந்திகா அபேசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் மதிப்பீடு செய்ய அரசாங்கத்தால் 5 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ​தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .