2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

அதிகாரியின் மின்கம்பியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

Editorial   / 2024 மார்ச் 25 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டியில் விவசாய தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக தோட்ட நிர்வாக அதிகாரி மீது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மரக்கறி செய்கை நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த நாவலப்பிட்டி- கிரேவ்ஹெட் தோட்டத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தியாகு செபஸ்டியன் (வயது 49) என்பவரே  உயிரிழந்துள்ளார்.

“உயிரிழந்த தனது தந்தை, ஞாயிற்றுக்கிழமை (24) காலை தோட்ட அதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தோட்ட வேலைக்குச் சென்றார்.

தனது தந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பிற்பகல் 3 மணியளவில் தோட்ட அதிகாரியால் தகவல் தரப்பட்டது.

வைத்தியசாலைக்கு சென்றபோது, ​​தனது தந்தையின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்து” என உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையின் மகள் நாவலப்பிட்டி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

மரக்கறிச் செய்கை நிலத்தைப் பாதுகாப்பதற்காக தோட்ட அதிகாரியால் மரக்கறிச் செய்கை நிலத்தில் சட்டவிரோதமாகப் போட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே  அவர் உயிரிழந்ததாக   உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X