Freelancer / 2022 நவம்பர் 13 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் தரம் 13 இல் கலைப் பிரிவில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரால், பாடசாலையின் அதிபருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி கிளையில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
முறையான ஒழுக்காற்று விசாரணை செய்யாமல் 2 வாரங்களாக வகுப்பில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு க.பொ. உயர்த்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள இம்மாணவன் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
அதிபரின் நடவடிக்கை காரணமாக நவம்பர் மாதம் 6 ஆம் திகதி நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான நடனப்போட்டியில் பங்குபற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்று முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கண்டி செயற்பாட்டு உறுப்பினர்களான ரேணுகா மலியகொட மற்றும் காஞ்சனாதேவி கிருபாகர் ஆகியோருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, கடந்த 9 ஆம் திகதி மாணவன் சார்பாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயற்பாடு குழு உறுப்பினரான ரேணுகா மலியகொட, பாடசாலையின் அதிபர் 2005/17 ஒழுக்காற்று சார் சுற்றுநிருபத்தினை கருத்திற்கொள்ளாது செயற்பட்டுள்ளார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளின் மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளமையினையும் எடுத்துக்காட்டியுள்ளதோடு வலயக்கல்வி பணிப்பாளருக்கு அறிவிக்காமல் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை சுற்றுநிருபத்தினை மீறிய செயற்பாடாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில், பாடசாலையின் ஒழுக்காற்று குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக இச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால் ஏனைய மாணவர்களுக்கும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago