Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
பெல்மதுளை தர்மாலோக்க மகா வித்தியாலயத்துக்கு, தகுதிவாயந்த புதிய அதிபர், புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாரென, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சில, நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி பாடசாலைக்கு புதிய அதிபராக கல்வி நிர்வாக சேசைவையில் சித்திபெற்ற எம்.ஏ.ஆர்.டி.மலவி ஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பாடசாலையில் 2,938 மாணவர்கள் கல்வி கற்பதோடு 92 அசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
இது தொடர்பில், மாகாண கல்வி அமைச்சர் மேலும் கூறுகையில்,
பெல்மதுளை தர்மாலோக்க மகா வித்தியாலயத்தில் 2,938 மாணவாகள் கல்வி கற்கின்றபோதிலும் கடந்த காலங்கள் முதல் சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே அதிபராகக் கடiயாற்றி வந்தார்.
இதனால் கடந்த காலங்களில் மேற்படி பாடசாலையில் கல்வி வளர்ச்சி, மிகவும் பின்னடைந்து காணப்பட்டது.
மேற்படி பாடசாலைக்குத் தரமுள்ள அதிபர் ஒருவரை நியமிப்பது குறித்து கடந்த காலங்களில் மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவந்த போதிலும் அதில் பல்வேறு இழுபறி நிலை ஏற்பட்டதன் காரணமாக, தகுதிவாய்ந்த புதிய அதிபர் ஒருவரை நியமிக்க முடியாமல் இருந்தது.
தற்போது அதிபர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைக்கு தகுதிவாயந்த புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
3 hours ago