2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அநாவசியமாக வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Gavitha   / 2020 நவம்பர் 10 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி. சந்ரு

மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து, மலையக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு நேற்று (09) வருகை தந்த பல வாகனங்களும் அதில் பயணித்தவர்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேல் மாகாணத்திலும் நாட்டில் ஏனைய சில பகுதிகளிலும் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், நேற்று முன்தினம் தளர்த்தப்பட்ட நிலையில், வெளிமாவட்டங்களுக்கு பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு, மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதேபோல மேல் மாகாணம் உட்பட கொரோனா வைரஸ் பரவக்கூடிய பகுதிகளில் உள்ளவர்கள், தீபாவளி பண்டிகைக்காக மலையக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு வருகைத்தர வேண்டாம் எனவும் அவ்வாறு வந்தால், குடும்பத்தோடு சுய தனிமைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெளியிடங்களில் இருந்து மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வருபவர்களைத் தடுப்பதற்கும், கண்காணிப்பதற்கும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கூட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே, மலையகத்துக்குள அநாவசியமாக நுழைய முற்பட்ட வாகனங்களும் நபர்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X