R.Maheshwary / 2022 மே 16 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
விவசாயத் திணைக்களத்தின் அனுமதி அல்லது சிபாரிசு இன்றி போலியான பூச்சிக்கொல்லி மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை விற்பனை செய்த இருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்தப் பொருள்களை நுவரெலியா நகரில் வீதியோரத்தில் விற்பனை செய்யும் போது நுவரெலியா பொலிஸார் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கந்தப்பளை மற்றும் ராகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், பதுளை ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்த ஒருவராலேயே இந்த போலி விவசாய இரசாயனப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, நாட்டின் பல பாகங்களிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்டவர்ளை கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்த சுமார் 100 போத்தல்கள் விவசாய இரசாயன திரவம், காட்சிப் பலகை மற்றும் பொருள்களை விற்கப் பயன்படுத்திய காட்சி மேசை ஆகியவற்றைக் கைப்பற்றிய போலிஸார், இரு சந்தேக நபர்களையும் பிணையில் கையெழுத்திட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நுவரெலியா விவசாய திணைக்களத்தின் உதவியுடன் நுகர்வோர் அதிகாரசபையின் அறிக்கையைப் பெற்றதன் பின்னர் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் நாளை ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago