2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அனுஷா தலைமையில் புதிய கட்சி

Editorial   / 2020 நவம்பர் 17 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் புதல்வியும் சட்டத்தரணியுமான  அனுஷா சந்திரசேகரன் தலைமையில், மலையகத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகவுள்ளதாக, உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியை உருவாக்குவதற்கான அனைத்தும் நடவடிக்கைகளும் இறுதிபடுத்தப்பட்டுள்ளது  எனவும் இது தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள், இவ்வார இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கட்சியில் மலையக மக்கள் முன்னணியின் அடிமட்டத் தொண்டர்கள் பலரும் இணைந்துகொள்ளவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

மலையகத்தில் அரசியல் மற்றும் சமூகமாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் சிலரும் இக்கட்சியில் இணையவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.  

மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளராக செயற்பட்ட அனுசா சந்திரசேகரன், நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தனித்து களமிறங்கி 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X