2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அபர்டின் நீர்வீழ்ச்சியில் நீராடியவர் உயிரிழந்தார்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 30 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

கினிகத்தேன அபர்டின் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் நீராடிக்கொண்டிருந்த  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (29) பகல் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த நீர்வீழ்ச்சிக்கு அண்மையில் வசிக்கும் 34 வயதுடைய நுவன் பிரேமச்சந்திர என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் நீர்வீழ்ச்சியைக் காண்பிப்பதற்காக தனது வீட்டிற்கு வந்த உறவினர்களை அழைத்துச் சென்றுள்ளார். இதன்போது உறவினர்கள் நீர்வீழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த போது, அடிவாரத்தில் நீராடிக் கொண்டிருந்த நபர், திடீரென காணாமல்  போயுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணகளை முன்னெடுத்து வருவதுடன்,சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X