2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அரசியல்வாதிகளே கண் திறந்து பாருங்க

Kogilavani   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

லிந்துலை, மவுசாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் கடந்த 3 வருடங்களாக நிர்மணிக்கப்படாமல் இருந்த பாலத்தை பிரதேச மக்கள் இணைந்து ஒருவாரத்துக்குள் புனரமைப்பு செய்துள்ளனர். இதற்காக 30,000 ரூபாய் செலவாகியதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.  

இவர்கள் அன்றாடம் பயணிக்கும் இப்பாலத்தின் ஒரு பகுதியானது உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. மாற்று வீதி இல்லாததால் இப்பாலத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு இம்மக்கள் தள்ளப்பட்டனர்.

மூன்று வருடங்களுக்கு மேலாகியும்  பாலம் புனரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  பாலத்தை புனரமைக்குமாறு மலையக அரசியல்வாதிகள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் என பலருக்கு அறிவித்த போதிலும் ஒருவரும் இதற்கு செவிசாயக்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து  பாலத்தை புனரமைக்கும் பணியை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பித்து 23  நிறைவு செய்துள்ளதுடன் அன்றைய தினமே பொதுமக்களின் பாவனைக்கும் கையளித்துள்ளனர்.

'எமது பிரதேச இளைஞர்களை முன் உதாரணமாகக் கொண்டு ஏனையோரும் செயற்பட வேண்டும். பொய் வாக்குறுதிகளை வழங்கும் அரசியல் வாதிகளை இனியும்  நம்பவேண்டாம். தமது பிரச்சினைகளுக்கு தாமே முன்வந்து செயற்பட்டால் வெற்றி பெறலாம்' என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .