2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அரசியல் விளம்பர பலகை சேதம்

George   / 2017 மார்ச் 31 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

திம்புள்ள, பத்தனை சந்தியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களின் விளம்பர பலகை இனந்தெரியாதவர்களால் நேற்று (30) இரவு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்வாறு சேதப்படுத்தப்பட்ட விளம்பர பலகையில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுக தொண்டமான், தலைவர் முத்துசிவலிங்கம் மற்றும் ஆதரவாளர்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ஆதலால் இவ்விடயம் தொடர்பில், பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர்  ராஜமணி கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .