2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

அரச வெசாக் நிகழ்வு பலாங்கொடையில்..

Freelancer   / 2022 மார்ச் 05 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

இவ்வருடம் அரச வெசாக் நிகழ்வு பலாங்கொடை - கூரகல விகாரையில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

2566ஆவது  ஸ்ரீ புத்த வருடத்தை முன்னிட்டு கலந்துரையாடல் ஒன்று சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது, அதில் கலந்து கொண்டு கருத்து தெரவிக்கையிலேயே   இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வருடம் அரச சொக் நிகழ்வு நடத்தவது குறித்து கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

புதிய பூமியான பலாங்கொடை கூரகல பொளத்த விகாரையை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அதன் ஆரம்ப பணிகள் வணக்கத்திற்குறிய வதுரகும்புரே தம்மரத்ன நாஹிமி மற்றும் அரசாங்கத்தின் சார்பாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் தலைமையில் கடந்த வருடம் மார்ச் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இம்முறை வெசாக் அரச நிகழ்வை மேற்படி கூரகல விகாரையில் நடாத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X