Editorial / 2025 நவம்பர் 25 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் அஸ்வெசும பயனாளர்களின் விபரங்களை புதுப்பிக்கும் திட்டம் சுமார் ஒன்றரை வருடத்திற்கு பிறகு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும் இது தொடர்பான போதிய விளக்கமின்மையால் மலையகத்தின் பெரும்பாலான தோட்டப் பகுதிகளில் தெரிவான பயனாளர்கள் அஸ்வெசும நிவாரணம் கிடைப்பதாக எண்ணி நகர்புறங்களில் உள்ள தொடர்பாடல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
அஸ்வெசும பயனாளர்களின் தரவுகளை புதுப்பிக்கும் இத்திட்டமானது சுமார் ஒன்றரை வருடக்காலத்துக்கு பிறகு முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் கிராம சேவகர்கள் இதுதொடர்பான உரிய விளக்கம் அளிக்கப்படாமல் அஸ்செசும விண்ணப்பங்களை நிரப்புமாறு தமக்கு வலியுறுத்தப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக நாவலப்பிட்டி நகரை அண்டிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளர்கள் தொடர்பாடல் நிலையங்களில் மணிக்கணக்கில் வரிசைகளில் நிற்பதையும் நேர தாமதம் காரணமாக இரண்டு மூன்று நாட்கள் வேலைகளுக்கு செல்லாமல் இதற்காக தாம் சிரமப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த மீள் புதுப்பித்தல் நடவடிக்கைக்காக நகர்புறங்களில் உள்ள தொடர்பாடல் நிலையங்களில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்வதற்கு 100 ரூபாயும் அதை நிரப்பிக் கொடுப்பதற்காக 150 ரூபாய் வீதமும் அறவிடுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று இரண்டாம் கட்ட கொடுப்பனவுக்காக தெரிவானோர் தமது அஸ்வெசும வங்கிக்கணக்கை ஆரம்பிப்பதற்காக அதிகாலை முதல் வங்கிகளுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருந்து அவஸ்தைக்குள்ளான சம்பவம் ஒருபுறமிருக்க தற்போது தரவுகளை மீள்புதுப்பித்தல் தொடர்பான தெளிவின்மையால் மீண்டும் அஸ்வெசும பயனாளர்கள் வீதிகளில் வரிசைகளில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
44 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago