R.Maheshwary / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஆசிரியர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிளில் சிக்கி, மாணவனொருவன் காயமடைந்த சம்பவம் ஹட்டனில் நேற்று முன்தினம் (12) பதிவாகியுள்ளது.
ஹட்டன் பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள், அதே பாடசாலையில் ஆரம்ப பிரிவில் கல்வி கற்கும் மாணவன் மீது மோதியதால், காயமடைந்த மாணவன், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (12) குறித்த மாணவன் பாடசலை நிறைவடைந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, திடீரென வீதியைக் கடந்துள்ளார்.
இதன்போது ஆசிரியரும் கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்ததாகவும், மாணவன் எதிர்பாராத விதமாக வீதியைக் கடந்த போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, ஆசிரியர் ஹட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago