2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர்களுக்கு சாவு மணி அடிக்காதே

Editorial   / 2023 மார்ச் 01 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

ஆசிரியர் சங்கத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட நு/  கார்லபேக் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் கறுப்புக்கொடி ஏந்தி பாடசாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

அதேவேளை, மாணவர்களுக்கு கற்பிக்கும் போதும் கறுப்பு உடை அணிந்து கைகளில் கறுப்பு பட்டி கட்டியிருந்தும் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

“தமக்கு வாழ்க்கை செலவுக்கு ஏற்ப கொடுப்பணவு வழங்க வேண்டும்.  சுதந்திரமாக போராட்டங்களை நடத்த அரசாங்கம் இடமளிக்க வேண்டும்” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் ஆசிரியர்களை மதித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.   

“விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து”, “வரிப்பணத்தை கைவிடு”, “ஜனநாயக அடக்கு முறையை கைவிடுதல்”, “ஆசிரியர்களின் முன்னேற்றத்துக்கு சாவு மணி அடிக்காதே”, “ஆசிரியர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்கு”, என்ற போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாகைளை ஏந்தியவாறு சுமார் 2 மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X