2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஆசிரியையிடம் கைவரிசையைக் காட்டியவர் பிரதேசவாசிகளிடம் சிக்கினார்

R.Maheshwary   / 2023 ஜனவரி 19 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஆசிரியையின் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடியவர் நையப்புடைக்கபட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று ஹட்டனில் நேற்று பதிவாகியுள்ளது.

ஹட்டன் நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றில் கற்பிக்கும் குறித்த ஆசிரியை நேற்று(18) பாடசாலை நிறைவடைந்து, குறுக்கு வீதியொன்றில் நகருக்கு சென்றுக்கொண்டிருந்த போது, குறித்த இளைஞன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடியுள்ளான்.

இதன்போது சிலர் சந்தேகநபரை பிடித்து நையப்புடைத்த பின் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபரை பிடித்த போது, அவரிடம் தங்க சங்கிலியில் இருந்த தாலி மட்டுமே காணப்பட்டதாகவும் தங்க சங்கிலியை சந்தேகநபர் வீசியிருக்கலாம் அல்லது விழுங்கியிருக்கலாம் என்றும் ​சந்தேகம்  தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர் 30 வயதானவர் என்றும் இவர் புஸ்ஸலாவை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .