R.Maheshwary / 2023 ஜனவரி 04 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
யட்டியாந்தோட்டையிலிருந்து சீபொத் வழியாக அமனாவல பிரதேசத்தில் பிரித்தானியர் ஆட்சி காலத்தில் பலகைகளினால் அமைக்கப்பட்ட பாலமொன்று தற்போது மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
குறித்த பாலம் ருவன்வெல்ல பொறியியலாளர் அலுவலகத்தினால் பலகைகள் இடப்பட்டு சீர்செய்யப்பட்டாலும் இதில் வாகனங்கள் பயணிப்பது மிகவும் ஆபத்தானதாக காணப்படுகின்றது.
இந்தப் பாலம் ஊடாக இ.போ.ச. பஸ் மற்றும் தனியார் பஸ்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் நாளாந்தம் சென்று வரும் நிலையில், பாலம் புனரமைப்பு செய்யப்படாவிட்டால் பாரிய ஆபத்து ஏற்படலாம் என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த நல்லாட்சியில் குறித்த இடத்தில் புதிய பாலமொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், குறித்த பாலம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு பலகையொன்றும் ருவன்வெல்ல பொறியியல் அலுவலகத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
53 minute ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago
9 hours ago