Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜூன் 23 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
மலையக பெருந்தோட்டங்களில் இயங்கும் வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்திய இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் எம்.பி. பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்னும் ஒருவாரத்தில் வர இருக்கிறது. அதில், நாம் எதிர்பார்க்கும் சாதகமான தீர்ப்பு வருமென எதிர்பார்ப்பதாக கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (22) விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என கடந்த இரு வருடங்களாக நாம் பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வருகிறோம். அரசாங்கமே தற்போதைய பிரச்சனைகளை உருவாக்கியது.
எனவேதான் அரசாங்கம் தோட்ட வைத்தியசாலைகளை பொறுப்பேற்க வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம். பணவீக்கம் அதிகரித்து வருகிறது இதனால் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கிறது. குறிப்பாக மலையகத்தில் ஒரு சில வர்த்தகர்கள் தாங்கள் நினைத்தது போல பொருள்களின் விலைகளை உயர்த்தி விற்பனை செய்து வருகிறார்கள். இதுபோன்ற வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகாரசபை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றார்.
தோட்டப் பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை பிரித்துத்தர வேண்டும் என சிலர் கூறுகிறார்கள். இதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம், கடந்த 20, 30 வருடங்களாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காணிகளை தோட்ட நிர்வாகங்கள் கையகப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பில் முறையான குழு அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கடந்த காலத்தில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்று கொடுத்திருக்கிறோம். பெருந்தோட்டங்களில் உள்ள 22 பெருந்தோட்ட கம்பனிகளின் 16 கம்பெனிகள் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்கினாலும் 6 கம்பனிகள் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குவதில்லை. எவ்வாறாயினும் 22 கம்பனிகளும் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை தீர்ப்பு இம்மாதம் இறுதியில் அதாவது ஒருவார காலத்தில் வர இருக்கிறது. எனவே, நாம் எதிர்பார்க்கும் சாதகமான தீர்ப்பு வரும் எனவும் தெரிவித்தார்.
அண்மையில் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சந்தித்து கலந்துரையாடி இருக்கிறோம். இதன்போது சம்பள நிர்ணய சபையை கூட்டி தற்போது இருக்கின்ற வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
2 hours ago
4 hours ago