2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 நவம்பர் 12 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரப்பத்தனை பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான பிரேமோர் தோட்டத்தில், கள உத்தியோகத்தர் ஒருவர், தொழிலாளர்களை தரங்குறைவாக பேசியமையைக் கண்டித்து, தோட்டத் தொழிலாளர்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்ட இடத்துக்குச் சென்ற மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், தொழிலாளர்களுடன் கலந்துரையாடியதுடன் இப்பிரிச்சினைக்கு உரியத் தீர்வை பெற்றுத்தருவதாகக் கூறியதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

இதேவேளை, மேற்படித் தோட்டத்தில் தாம் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும், தொழிலாளர்கள், மாகாண சபை உறுப்பினரின் கவனத்துக்குக் கொண்டுச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .