2025 மே 05, திங்கட்கிழமை

ஆற்றில் மூழ்கி இளைஞன் பலி

Gavitha   / 2020 நவம்பர் 22 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

ஹப்புத்தளை, ரத்கரவ்வ ஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர், இன்று (22), ஆற்றில் மூழ்கிப் பலியாகியுள்ளார் என, ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தார்.

கந்தகம எனும் இடத்தைச் சேர்ந்த, சந்துன் தில்ஷான் என்ற 26 வயது இளைஞனே, இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

இவர், மரக்கூட்டுத்தாபனத்தில், ஒப்பந்த அடிப்படையில் மரங்களை வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் இவருடன் 08 பேர் குளிக்கச் சென்ற போதிலும், இவர் மாத்திரம் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

குறித்த இளைஞன் நீரில் மூழ்கிய பின்னர், தியத்தலாவ இராணுவ முகாமைச் சேர்ந்த சுழியோடிகள், குறித்த ஆற்றில் தேடுதல் நடத்திய பின்னரே, இவ்விளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X