Ilango Bharathy / 2021 ஜூன் 28 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷன்
மலையக கோவில்களில் கடமையாற்றும் அனைத்து குருமார்களும் தம்மை பதிவு
செய்துக்கொள்ள வேண்டுமென, இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளரும் அகில இலங்கை இந்துமா சபையின் தலைவருமான சிவஸ்ரீ வேலு சுரேஜ்வர சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் (27) கொட்டகலை இந்து குருமார் ஒன்றிய தலைமை பீடத்தில் நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”மலையக குருமார் தொடர்பாக தகவல்கள் திரட்டப்படும் போது அது சரியான முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை. இங்குள்ள கலாசார உத்தியோகத்தர்களுக்கு கூட அது தொடர்பான விளக்கம் இல்லை என்பதுடன், அரசாங்கம் விடுக்கும் அறிவிப்புகள் கூட குருமாருக்கு சென்றடைவதில்லை.
அத்துடன், குருமாருக்கு வழங்கப்படும் சலுகைகள், நிவாரணங்கள் மலைய குருமாருக்கு
கிடைப்பதில்லை என்பதுடன், அவை பிரதான கோவில்களில் உள்ளவர்களுக்கு மாத்திரம் தான்
கிடைக்கின்றன.
எனவே இவ்வாறான விடயங்களுக்காக சகல குருமாரும், இந்து கலாசார திணைக்களத்தால்
கோரப்பட்டுள்ள விபரங்களை சமர்ப்பித்து, தம்மை பதிவு செய்துக்கொள்ள வேண்டும்
என்பதுடன், இத தொடர்பில் மேலதிக விபரங்களை மலையக இந்து குருமார் ஒன்றியத்துடன்
தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.
13 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago