R.Maheshwary / 2022 ஜூன் 05 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
நுவரெலியா மாவட்டத்துக்குள் பலா மரங்களை வெட்டுவதற்கு வழங்கப்படும் அனுமதிபத்திரங்களை இரத்துச் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்களுக்கும் இது தொடர்பான ஆலோசனை வழங்கியுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ந்தன கலபட தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு நெருக்கடிக்கு தீர்வாக இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பலா மரங்களை வெட்டுவதற்கு பலரும் அனுமதி கோரியுள்ள நிலையில், சில ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை வெட்டுவதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அனர்த்த நிலைமை தொடர்பில் உறுதிப்படுத்திய பின்னரே இந்த அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago