Editorial / 2023 ஜனவரி 05 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 15ஆம் திகதியன்று பொங்கலாகும். பொங்கலுக்குப் பின்னர் 17 ஆம் திகதியே தமது தீர்மானத்தை அறிவிக்க காங்கிரஸ் இன்று (05 தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் இன்று (05) கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் ஒவ்வொரு மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிட உள்ள எல்லைக்கு உட்பட்ட வட்டாரங்களில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக மாவட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மேலும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என்பது தொடர்பாக பல கோணங்களில் ஆராயப்பட்டது. இறுதி தீர்மானம் இம்மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் குழு, வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான குழு,பிரசார குழு என மூன்று குழுக்கள் இதன் போது நியமிக்கப்பட்டுள்ளன.
செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சின்னம் சேவல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
52 minute ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
3 hours ago
9 hours ago