2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

இரண்டாவது நாளாகவும் ஹட்டனில் பஸ்கள் ஒடவில்லை

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 20 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் பஸ் தரிப்பிடத்திலிருந்து தினமும் சேவையில் ஈடுபடும் குறுகிய மற்றும் தூர இடங்களுக்கான தனியார் பஸ்கள் இன்றும் போக்குவரத்து சேவையில் இருந்து விலகியிருக்கின்றன.

டீசல் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணங்களின் 35 சதவீத அதிகரிப்பு போதமானதாக இல்லை என்றும் எனவே பஸ் கட்டணங்களை 50 சதவீதமாக அதிகரிக்குமாறும் தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் இன்றைய தினம் மாணவர்களின் வருகையில் பாரிய வீழ்ச்சி காணப்படுவதாக பாடசாலை அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  ரயில் சேவைகள் வழமைப்போல் இடம்பெற்றாலும்  ரயிலில் பயணிப்பதற்கு போதுமானளவு பயணிகள் இல்லை என ரயில் நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ள நிலையில், இன்று (20) ஹட்டன் இ.போ.ச டிப்போ மூலம் அதிகமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டாலும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X