2025 மே 15, வியாழக்கிழமை

இரண்டு பஸ்கள் மோதிக் கொண்டதில் நால்வருக்கு காயம்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 16 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஸபக்ஸ, செ.தி. பெருமாள்

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற  தனியார் பஸ்ஸொன்றும்  ஹட்டனிலிருந்து  கண்டி நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸொன்றும்  நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள்  கினிக்கத்தேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பகல் இரண்டு மணியளவில் கினிகத்தேனை பேரகஹமுல்ல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற இ.​போ.ச பஸ், பேரகஹமுல்ல பகுதியில் பயணிகளை இறக்கிக்கொண்டிருந்த போது, பின்னால் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கடவத்த டிப்போவுக்குரிய மற்றுமொரு இ.போ.ச பஸ்,நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வந்த தனியார் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸின் சாரதி பஸ்ஸை கவனக்குறைவாக செலுத்தியுள்ளமையே இந்த விபத்துக்கு காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்ததுடன், சாரதியைக் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .