2025 மே 16, வெள்ளிக்கிழமை

இரண்டு பிரதான கட்சிகளும் மாத்தளையில் கட்டுப்பணத்தை செலுத்தின

R.Maheshwary   / 2023 ஜனவரி 16 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக, இரண்டு பிரதான கட்சிகள் இன்று (16) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி என்பனவே இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

இதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியானது, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தலைமையில் இன்று (16) கட்டுப்பணத்தை செலுத்தியது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேரா கட்டுப்பணத்தை செலுத்தினார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .