2025 மே 15, வியாழக்கிழமை

இரத்தினக்கல் அகழ்வு ஏல விற்பனைக்கு மவுண்ட்ஜின் மக்கள் எதிர்ப்பு

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்‌ஷ

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை ஊடாக ஒரு வருடத்துக்கு வட்டவளை- ஹட்டன்ஓயாவில்சட்டரீதியான இரத்தினக்கல் அகழ்வுக்கு அனுமதியளித்து நடத்தப்பட்ட ஏலத்துக்கு தோட்டத் தொழிலாளர்களும் பிரதேசவாசிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கினிகத்தேன பிரதேச செயலகத்தின் சமுர்த்தி கூட்ட மண்டபத்தில் வைத்தே, ஹட்டன் ஓயாவின் ஐம்பது மீற்றர் தூரம் சுற்றாடலுக்குப் பாதிப்பில்லாத வகையில் இரத்தினக் கற்களை அகழ்வதற்காக ஓராண்டுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

ஏலத்துக்கான  அனுமதியைப் பெறுவதற்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இரத்தினக்கல் வியாபாரிகள் ஏல மண்டபத்திற்கு வந்திருந்த நிலையில், மவுண்ட்ஜின் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் ஏலம் நடைபெற்ற இடத்திற்கு வந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தமது தோட்டத்தை ஊடறுத்துச் செல்லும் ஹட்டன் ஓயாவில் இதற்கு முன்னரும் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை ஊடாக இரத்தினக்கல் அகழப்பட்டதாகவும் அதன்மூலம் கிடைக்கும் இரத்தினக்கற்களை விற்ப​னை செய்யும் ஒரு பகுதி பணத்தை தமது கோவிலின் புனரமைப்பு பணிகளுக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் வழங்குவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்த நிலையில்,இதுவரை எவ்வித பணமும்  வழங்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மவுண்ட்ஜின் தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்​னெடுக்கப்பட்ட போதிலும் கடும்  பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஏல விற்பனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், குறித்த இடத்தில் சட்டரீதியான இரத்தினக்கல் அகழ்வை முன்னெடுக்க 50 மில்லியன்  ரூபாய்க்கு ஏலத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .