2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இரத்தினபுரியில் ஒரு மாதத்துக்குள் 3,000 PCR பரிசோதனைகள்

Gavitha   / 2020 நவம்பர் 10 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம், கடந்த ஒரு மாதத்துக்குள், 3,000 பிசிஆர் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு, அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அனோஜ் ரொட்றிகோ இன்று  (10) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எம்பிலிப்பிட்டிய தலைமைத்துவ பயிற்சி நிலையம், காவத்தைக் கல்வியியற் கல்லூரி, பலாங்கொடை சமுர்த்தி பயிற்சி நிலையம், உந்துகொடை, றம்புக்கன அரசாங்க வைத்தியசாலைகளில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் இருந்தும் அனுப்பி வைக்கப்படும் மக்களுக்கு, இரத்தினபுரி போதான வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோனை முன்னெடுக்கப்படுவதாகவும் தினமும், 100க்கும் மேற்பட்டோருக்கு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், 100க்கும் மேற்பட்டோருக்கான பரிசோதனை செய்யும் சூழ்நிலை ஏற்படும்போது, ஆளணிப்பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X