Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 20 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி புதிய நகரை, சுற்றுலா வலயமாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்ஷல் பெரேரா தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில், சுற்றுலாத்துறையை அபிவிருத்திச் செய்வது குறித்து, மாகாண சபைக் கட்டடத் தொகுதியில், நேற்று (20) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
“இரத்தினபுரி புதிய நகரம் மிகச் சிறந்த அழகியச் சூழலை கொண்டதாகும். இந்நகரில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு, சுற்றுலா ஓய்வு விடுதி, உணவகங்கள் மற்றும் பல வசதிகளைக் கொண்ட கட்டடத் தொகுதி அமைக்கப்படும்.
“நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேசிய இரத்தினக்கல் அதிகார சபை என்பன, சப்ரகமுவ மாகாண சபையுடன் இணைந்து, சகல வளங்களையும் கொண்ட கட்டடத் தொகுதியை அமைப்பதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளன.
மேலும், தேசிய இரத்தினக்கல் அதிகார சபை, நகைகள் விற்பனை மற்றும் கண்காட்சி நிலையம் ஒன்றையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
24 minute ago
36 minute ago