R.Maheshwary / 2022 மே 16 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மற்றும் இராகலை ஆகிய பிரதான நகரங்களில் இருந்து இராகலை -புரூக்சைட் சந்தி ஊடாக கோனப்பிட்டிய மற்றும் ஹைபொரஸ்ட் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் போக்குவரத்து சேவை கடந்த ஒருவாரத்திற்கு மேலாக சீராக இயங்குவதில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதிக்கான பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் என்பன எரிபொருள் இன்மையால் சேவையில் ஈடுபடவில்லை என பஸ் சாரதிகள் தெரிவிப்பதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் குறித்த பகுதிகளிலிருந்து இராகலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதான நகரங்களுக்கு அன்றாட கடமைகளுக்காக செல்வோர் பாரிய அசௌகரிகங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் நாளாந்தம் சுமார் 1,000 ரூபாய் வரை ஓட்டோக்களுக்கு செலவு செய்ய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago