2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

இராகலை பிரதேச தோட்ட வைத்தியசாலைகளுக்குப் பூட்டு

R.Maheshwary   / 2022 ஜூன் 01 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட இராகலை பிரதேச தோட்டப்பகுதிகளில் இயங்கி வந்த தோட்ட வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் குறைந்து வருவதுடன் சில தோட்டப்பகுதிகளில் வைத்திய சேவைகள் நிறுத்தப்பட்டும் வருகிறது.

இது திட்டமிட்ட செயல் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதாக வலப்பனை பிரதேச சபையின் தேசிய தொழிலாளர் முன்னணி உறுப்பினர் பெருமாள் சண்முகம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.,

கடந்த சில மாதங்களாக இராகலை பிரதேசத்தில் தோட்டங்களில் முறையாக முன்னெடுக்கப்பட்டு வந்த தோட்ட வைத்திய சாலைகளின் வைத்திய சேவை செயற்பாடுகள் குறைந்தும் பின் முற்றாக நிறுத்தப்பட்டும் வருகிறது.

இதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட வைத்தியசாலைகள் ஊடாக பெற்றுக்கொள்ள கூடிய வைத்திய சேவைகள் உள்ளிட்ட பிறப்பு, இறப்பு தொடரபான ஆவணங்களை பெற்றுக்கொள்ளது போன்ற பிரச்சினைகளுக்கு பாரிய சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் இராகலை மத்திய பிரிவு தோட்டம், சென் லெணாட்ஸ் தோட்டம், லிடேஸ்டல் தோட்டம், டெல்மார் தோட்டம் மற்றும் ஹைபொரஸ்ட் தோட்ட மக்கள் தோட்ட வைத்திய சாலைகள் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய சேவை பிரச்சினைகளுக்கு நாள்தோரும் பிரச்சினைகளை அனுபவிக்க நேரிட்டுள்ளது.

அத்துடன், இராகலை நடுக்கணக்கு தோட்டத்தில் புனரமைக்கப்பட்டுள்ள மகப்பேற்று வைத்தியசாலை கட்டடத்தில் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் வைத்தியர் ஒருவர் இல்லாத நிலையில் இராகலை மத்திய பிரிவு இலக்கம் (01) தோட்ட வைத்தியசாலை இழுத்து மூடப்பட்டுள்ளதால் இத் தோட்ட வைத்தியசாலை ஊடாக சேவையை பெற்று வந்த ஐந்து தோட்ட மக்கள் இன்று பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர்.

 

 

 

இந்த நிலையில் பெருந்தோட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் பிரதேசங்களில் இயங்கும் தோட்ட மற்றும் பிரதேச வைத்தியசாலைகளில் குறைப்பாடுகளை நிவர்த்திக்காது படிப்படியாக செயற்பாடுகளை முடக்கி மூடிவிடும் முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 

இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை வலப்பனை பிரதேச சபை அமர்வில் சபையின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X