R.Maheshwary / 2022 ஏப்ரல் 24 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
தோட்ட உட்டகட்டமைப்பு வசதிகள் மற்றும் கால்நடைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அண்மையில் பதவியேற்ற பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரின் வீட்டுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
லிந்துலை- மெராயா பகுதியில் உள்ள அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக, பிரதேச இளைஞர்கள் எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதால், இவ்வாறு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார சிக்கல், பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படும் நிலையில், இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் சுயநலமாக அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ளதாகவும் எனவே, உடனடியாக பதவியிலிருந்து, அவர் பதவி விலக வேண்டும் என தெரிவித்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


9 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
18 Jan 2026