2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

இராமர் சிலை மாயம்

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.யோகா

கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹவில தோட்டத்திலுள்ள  ஸ்ரீ இராமர் கோவிலுள்ள இராமர் சிலையானது,  நேற்று (22)  காணாமல் போயுள்ளது.

குறித்த கோவிலில்  சில நாள்களுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடைப்பெற்று, புதிதாக கொண்டு வரப்பட்ட இராமர் சிலையே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

கோவிலுக்கு விளக்கு ஏற்றுவதற்குச் சென்ற ஒருவர், அங்கு சிலை இல்லாததைக் கண்டு தோட்ட மக்களுக்கு அறிவித்துள்ளார்.

கோவிலின் கூரை வழியாகவே கோவிலுக்குள் வந்து, இந்த சிலை திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த சிலையை திருடிய சந்தேக நபர்கள், கோவிலுக்கு முன்பாக மிளகாய்த் தூளையும் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

 இந்தச் சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்தில் கோவில் நிர்வாகம் முறைப்பாடு செய்துள்ளதுடன், கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X