R.Maheshwary / 2022 நவம்பர் 21 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடைக்கான அனுமதி பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி வர்த்தக நிலையத்தை அமைப்பதை தடைசெய்யுமாறு, என பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா பொது செயலாளருமான ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு புளியாவத்தை பிரதேச மக்கள் கொண்டு வந்தனர்.
புளியாவத்தை நகரில் உள்ள ஆலயத்துக்கு அருகில் குறித்த இறைச்சி கடையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதே, மக்கள் அதற்கு எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஜீவன் தொண்டமானிடம் கோரிக்கையும் விடுத்தனர்.
நோர்வூட் பிரதேச சபையால் புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி அமைக்க கேள்வி(டெண்டர்) அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, டெண்டருக்காக நோர்வூட் பிரதேச சபைக்கு நபர் ஒருவர் 15 இலட்சம் ரூபாய் பணத்தை பிரதேச சபைக்கு செலுத்திய நிலையிலேயே, ஜீவன் தொண்டமான் நோர்வூட் பிரதேச சபை விடுத்துள்ள மாட்டிறைச்சி கடைக்கான டெண்டர் அறிவித்தலை நிறுத்தி, டெண்டருக்காக பெறப்பட்ட 15இலட்சம் ரூபாவை உரியவரிடம் கையளிக்குமாறு தவிசாளர் குழந்தை ரவிக்கு பணித்துள்ளார்.
20 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
4 hours ago