Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூன் 23 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
கொழும்பிலிருந்து நாவலப்பிட்டி வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் மோதிய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (22) மாலை கினிகத்தேனை – ரம்பாதெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் கினிகத்தேனை- பல்லேவல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதானவர் என்றும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் மோட்டார் சைக்களில் கினிகத்தேனை நகரிலிருந்து தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, தனக்கு முன்பாக பயணித்த கார் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது, வீதி வழுக்கியதால் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த பஸ்ஸில் மோதியுள்ளார்.
இதன்போது உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிளானது வழுக்கியவாறு பஸ்ஸின் அடியில் சென்றுள்ளது.
இதன்போது கடும் காயமடைந்த அவர், கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
எனினும் இந்த விபத்தை தடுக்க பஸ்ஸின் சாரதி முயற்சி எடுத்த போதிலும் பஸ் மண்திட்டு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
59 minute ago
1 hours ago
3 hours ago