R.Maheshwary / 2022 மார்ச் 23 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஈசி கேஸ் முறையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்கள் ஹட்டன்- கலால் அலுவலக அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20- 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், இவர்கள் ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஈஸி கேஸ் மூலம் ஹெரோய்ன், கஞ்சா போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்து வந்துள்ளதுடன், இவர்களுள் ஐவரிடமிருந்து 1170 மில்லிகிராம் ஹெரோய்னும் ஏனைய மூவரிடமிருந்து 4,800 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கலால் அலுவலகஅதிகாரிகள் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026