Sudharshini / 2016 ஜனவரி 20 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
இறக்குவானை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட உடவெல சுகாதார மத்திய நிலையத்தை கிராமிய வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு சப்ரகமுவ மாகாணசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கென இருமாடி கட்டடத்தொகுதி உட்பட ஏனைய சகல வளங்களையும் உபகரணப் பொருட்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு சப்ரகமுவ மாகாண சுகாதார அமைச்சின் மூலம் 110 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அபிவிருத்திப் பணிகள் செவ்வாய்க்கிழமை (19) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சரும் மாகாண சுகாதார அமைச்சருமான மஹிபால ஹேரத், மாகாண வீதி அபிவிருத்தி கிராமிய உட்கட்டமைப்பு, விளையாட்டுத்துறை மற்றும் சுற்றுலா பிரயாணத்துறை அமைச்சர அதுல குமார ராகுபந்த உட்பட பலர் கலந்துகொண்டனர்.
25 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
49 minute ago