2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

உதவி தோட்ட முகாமையாளர் மர்மமாக மரணம்

Editorial   / 2025 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன், வட்டவல பகுதியில் உள்ள வெலிஓயா தோட்டத்தில் பணிபுரிந்து வந்த மூத்த உதவி தோட்ட முகாமையாளர், தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக வட்டவல பொலிஸார் தெரிவித்தனர்.

மர்மமான முறையில் உயிரிழந்த நபர், குறித்த தோட்டத்தின் மூத்த உதவி தோட்ட முகாமையாளராக பணியாற்றி வந்த அனவாகி ரிட்டோ அமீன் (வயது45) ஆவார்.

குறித்த தோட்ட முகாமையாளர் இன்று (25) காலை கடமைக்கு சமூகமளிக்க எழுந்திருக்காததால், குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிபுரியும் சமையல்காரர்,   உதவி தோட்ட முகாமையாளரின் படுக்கையறைக்குச் சென்று பார்த்துள்ளார்.  உதவி தோட்ட முகாமையாளர் அங்கு இல்லாததால், குளியலறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு  உதவி தோட்ட முகாமையாளர் விழுந்து கிடந்துள்ளார். சமையல்காரர் உத்தியோகபூர்வ இல்லத்தின் காவலருக்கு தகவல் தெரிவித்தார், மேலும் தோட்டத்தின் முகாமையாளர் வட்டவல பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

உதவி தோட்ட முகாமையாளர் குளியலறையில் வழுக்கி விழுந்து சுவரில் தலை மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக வட்டவல பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X