Janu / 2025 டிசெம்பர் 22 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
"உதிரம் கொடுத்து உயிர்களை காப்போம் " எனும் தொனியில் இரத்த தான நிகழ்வொன்று பேராதனை போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெறவுள்ளதாக வைத்தியர் ஜனக்க காஞ்சன மதுநாயக்க தெரிவித்தார்.
காலை 08 மணி முதல் மாலை 03 மணி வரை இந் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவித்த அவர், அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட "தித்வா" புயலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்குவதற்காகவே இந்த இரத்த தானம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் இயங்கி வரும் இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இரத்த தானம் செய்ய முன் வருபவர்களை வரவேற்பதாகவும், இதில் ஏறத்தாழ 150 க்கு மேற்பட்ட இரத்த கொடையாளிகளை எதிர் பார்த்திருப்பதாகவும் ஜனக்க காஞ்சன மதுநாயக்க தெரிவித்தார்.
ஆ.ரமேஷ்
34 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
4 hours ago