Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
2016இல் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச இரண்டாம்கட்ட கருத்தரங்குகள் எதிர்வரும் 16,17 ஆம் திகதிகளில் காலை 7.30 மணிமுதல் மாலை 5 மணிவரை பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
க.பொ.த.உயர்தர பரீட்சையில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கே இக்கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன. உயிரியல், இணைந்த கணிதம், இரசாயனவியல், பௌதிகவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளன.
இதன்போது, மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் கற்றல் ஊக்கிகள் இலவசமாக வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்குக்கு வடக்கு ஆறுதல் மற்றும் தொண்டமானாறு வெளிக்கள நிறுவனத்திலிருந்து வளவாளர்கள் வருகை தரவுள்ளதுடன் உயிரியல், இணைந்த கணிதம், இரசாயனவியல், பௌதிகவியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்படவுள்ளன.
பங்குபற்ற விரும்பும் மலையக பாடசாலை மாணவர்கள், பாடசாலையின் அதிபருக்கூடாக விண்ணப்பிக்க முடியுமென அறுவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை அ.மத்தியூ (விரிவுரையாளர்) ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி, பத்தனை என்ற முகவரிக்கு அனுப்புமாறும் மேலதிக தகவல்களுக்கு 071-8219992 என்ற அலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளில் கல்வி பயின்றுவரும் மலையக மாணவர்களின் பெறுபெற்று அடைவுமட்டத்தை அதிகரிப்பதுடன் தற்போது முழுமையாக நிரப்ப முடியாமலிருக்கும் ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரிக்கு அவசியமான கணித, விஞ்ஞான ஆசிரிய மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதே இதன் நோக்கமென ஏற்பாட்டாளரான அ.மத்தியூ தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025